இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் அனைத்தும் பக்கச்சார்பானவையாகும் என ஊடகத்துறை அமைச்சரும், கண்காணிப்பு எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இது குறித்து ஐ.நா. செயலாளர்நாயகம் பான் கீ மூன் விசாரணை நடத்த
வேண்டுமென்றம் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி திருத்தச் சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கவனம் செலுத்தியிருக்காத அதேவேளை, காத்தான்குடி, அரந்தலாவை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் இல்லை. அங்கு புலிகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து சிந்திக்கவும் இல்லை எனவும் அஸ்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 Comments