வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடவளை நகரிலுள்ள இரண்டு பொதுநிறுவனங்கள் ஒரே இரவில் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.மடவளை மதீனா மத்திய கல்லூரி மற்றும் அதற்கு முன்னாலுள்ள ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளி(பெரிய பள்ளி) என்பவற்றின் காரியாலய அறைகளே உடைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து வத்துகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் பாடசாலையில் காவலாளி கடமையில் இருந்த போதும் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. காவலாளி முன் புறம் இருந்ததாகவும் பின் புறமாக வந்து உள்நுழைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மதீனா மத்திய கல்லூரி காரியலாயத்தில் இருந்த ஆவணங்கள் வைக்கும் அலுமாரியில் இருந்த ஒலிபெருக்கி விரிவாக்கல் கருவிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதமின்றி காணப்பட்டதாகவும் ஆவணங்கள் சில குறைவதாகவும் தெரியவருகிறது.
பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் ஜாமியுள் கைராத் பள்ளியிலும் காரியாலண அறை பின் பக்க யன்னல் ஒன்று உடைக்கப்படடுள்ளது. அங்கும் சில தஸ்தாஜூவேக்கள் காணாமற் போயுள்ளன.
0 Comments