Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சிரியாவில் இராணுவத் தலையீட்டுக்கு அமெரிக்கா தயார்

சிரியாவில் இராணுவ ரீதியாக தலையிட அமெரிக்கப் படைகள் தயாராகவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.அதிபர் ஒபாமா அனுமதியளித்தால் தமது படைகள் நடவடிக்கைகளை தொடங்குவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.இராணுவ
தளவாடங்கள் என்று அவர் கூறும் அனைத்தும் உரிய இடங்களுக்கு நகர்த்தப்பட்டுளன என்றும், அதிபர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி நடவடிக்கை செயல்படுத்தப்படும் எனவும் சக் ஹேகல் தெரிவித்தார்.
கடந்த வாரம் அங்கு நடைபெற்ற சந்தேகத்துக்குரிய இரசாயனத் தாக்குதலுக்கு சிரியாவின் அரசே பொறுப்பென்பது மேலும் மேலும் தெளிவாகி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.-BBC-

Post a Comment

0 Comments