Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தலைபிறை தென்படவில்லை: வெள்ளிக் கிழமையே நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தென்படாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வெள்ளியன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய மண்டபத்தில் இடம் பெற்ற ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழு
கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பிறையை காணாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என தீர்மானித்த பிறைக்குழு, நாளை நோன்பு அனுஷ்டிப்பது எனவும் நாளை மறுதினத்தை ஷவ்வால் தலைபிறையாகக் கொண்டு பெருநாள் கொண்டாடுவது எனவும் தீர்மானித்தது.

Post a Comment

0 Comments