ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய கம்பஹா, வெலிவேரிய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 வயதுடைய இளைஞன் அகில உட்பட மூன்று பேர் பலியானதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
0 Comments