Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகம் மீது தாக்குதல்

கண்டி, கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார்.அலுவலகத்திற்குள் புகுந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அலுவலகத்தை தாக்கிதாகவும் அப்போது அங்கிருந்த தனது
சகோதரரான மொஹமட் சியான் என்பவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர் அங்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் மேலும் தெரிவித்தார்.
இத் தாக்குதலின் போது அலுவலகத்திலிருந்த உடைமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இக் காரியாலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைசச்ருமான ரவூப் ஹகீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments