Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் கைசாத்து

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன.

தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாந்தர் லூக்கஸன் கோவை
சந்தித்து கலந்துரையானார்.வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல், குற்றவியல் தொடர்பான விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுத்தல்,
சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என முதலான உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments