மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.50 மணியளவில் பெலாரஸுக்கு பயணமானார்.இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ராஜபக்ஷ, பெலாரஸ் ஜனாதிபதி எலெக்ஸாண்டர் லுகஷென்கோ, பிரதமர் பேராசிரியர் மிகைல் மியாஸ்னிகோவிச் டெலாரஸ் தேசிய பேரவையின்
குடியரசு கவுன்சிலின் தலைவர் எனடொலி ருபினோவ் மற்றும் பெலாரஸ் தேசிய பேரவை பிரதிநிதிகள் இல்லத்தலைவர் விலாடிமிர் அணட்ரெய்ரென்கோ ஆகியோர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அரசியல் ரீதியான சந்திப்புகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ராஜபக்ஷ சுற்றுலா மன்றமொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதுடன் தலைநகர் மின்ஸ்கில் உள்ள வாகன உற்பத்தி நிலையமொன்றுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான விசேட விமான ஒன்றில் வர்த்தக தூதுக்குழு ஒன்றுடன் பயணமாகும் ஜனாதிபதி, அங்கு நடைபெறவுள்ள வர்த்தக மன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளதுடன் அம்மன்றத்தில் அந்நாட்டு பிரதமர் மியாஸ்னிகோவிச் உடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

0 Comments