
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என அனேகர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்த தயார் என்றாலும், நாட்டின் நிலையான சமாதானம், சுதந்திரம் என்பவற்றை கருத்திற்
கொண்டு அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளவும் தயார் என பிரதமர் குறிப்பிட்டார்.
வடக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் அது மாநில அரசாக மாறிவிடும் என கூறும் பிரதமர், அதன்மூலம் காணி பங்கீடு மற்றும் பாதுகாப்பு என்பன அவர்கள் வசமாகும் எனவும் கூறுகிறார்.
நாட்டை பாதுகாப்பதா அல்லது பிரித்து கொடுப்பதா என்பதை தீர்மானிக்க எதிர்வரும் தேர்தல் மிக முக்கியமானதாகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.
0 Comments