மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற போது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நற்பண்புகளும் நல்லொழுக்கங்களுமுள்ள மக்களின் நன் மதிப்பை பெற்றவர்களை தெரிவு செய்ய வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.புஸல்லாவ நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே பிரதமர் ஐயரட்ண இவ்வாறு கூறினார்.அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,மத்திய மாகாண சபைத் தேர்தலானது தங்களது மாகாணத்திற்குள்ளான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான தங்களுக்கான சிறந்த சேவையாற்றக் கூடிய பிரதி நிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கானதாகும்.
எனவே இத்தேர்தலின் போது உறவினர்கள் குடும்பத்தவர்கள், நண்பர்கள் என்ற உறவு நட்புகளை பார்த்து வாக்களிக்காமல் தம் மாகாணத்திற்கு சேவையாற்றக் கூடிய நல்லொழுக்கம், நட்பண்புகளைக் கொண்டவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு சேவையாற்றக் கூடியவர்கள் தெரிவாகும் பட்சத்தில் தான் மக்களுக்கானதும் தம் மாகாணத்திற்கானதும் சிறந்த சேவைகள் கிட்டுவதுடன் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க ஏதுவாகும் என்றார்.
0 Comments