Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாம் நிக்காபை பற்றி பேசும்போது ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன : பொது பலசேனா

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதனால் கசினோ சூதாட்டம் நிறுத்தப்படப் போவதில்லை. ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவிப்பதனால் குற்றங்களை மாற்றிவிட முடியாதென பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.மேலும் தமிழ் ஊடகங்களினாலேயே
முஸ்லிம் மக்கள் பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். நாங்கள் நிக்காபை பற்றி பேசும் போது ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன.தீவிரவாத தன்மைக்கு மட்டுமே நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments