Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மூன்று மாகாணங்களிலும் 110 தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவங்கள்

தேர்தல்கள் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் நேற்று வரை 110 தேர்தல் விதிமுறையை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள வன்முறைகளை பதிவு செய்யும் பிரிவு தெரிவித்தது.110 சம்பவங்களில் 8 வன்முறை சம்பவங்களாகும் எனவும் குருநாகலை மாவட்டத்திலேயே தேர்தல் விதிமுறைகளை மீறும்
சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.இதன்படி குருநாகலை - 26, புத்தளம் - 6, கண்டி - 13, மாத்தளை - 18, நுவரெலியா - 8, யாழ்ப்பாணம் - 8, கிளிநொச்சி - 21, மன்னார் -1, வவுனியா-1, முல்லைத்தீவு - 4 என தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments