Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.


கொழும்பில் வசிக்கும் தமிழ் பேசும் வறிய மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை கொழும்புக்கு வெளியே அனுப்பும் கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.கொழும்பு மாளிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் தமிழ்,முஸ்லிம் மக்களே குடிசைகளில் வசித்து வருகின்றார்கள். கொழும்பின் பல பகுதிகளிலும் சிறுசிறு வர்த்தகங்கள் மற்றும் கூலித் தொழில் மூலம் வருமானமீட்டும் இவர்களில் பெரும்பாலானவர்கள், கால்நூற்றாண்டைக்
கடந்த நிலையில் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொழும்பை அழகுபடுத்தப் போவதாக பிரசாரம் செய்துகொண்டு, அதன் பின்னணியில் கொழும்பில் வசிக்கும் தமிழ்,முஸ்லிம் மக்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கொண்டுவருகின்றார்.
இதன் ஒரு கட்டமாக மாளிகாவத்தைப் பகுதி குடிசைவாசிகளை அகற்றுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் தமது குடிசை வீடுகளை இடித்து தம்மை வேற்றிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அப்பகுதிகளில் உள்ள குடிசைகளை இடிப்பது தொடர்பில் தடை உத்தரவு விதித்துள்ளது. அங்குள்ள மக்களை வேற்றிடங்களில் குடியமர்த்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பே குடிசைகள் இடிக்கப்பட வேண்டும் என்றும் கோத்தபாயவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments