மக்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்த குழுக்களுக்கு எதிராகவோ நாம் செயற்படவில்லை.
நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் முஸ்லிம் அடிப்படைவாதம் சம்பந் தமாக எமது கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம். சுமார் 30 வருடகாலமாக புலிப் பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் பல துன்பங் களை அனுபவித்தோம். ஓரிருவரால் முன்னனெடுக்கப்பட்ட அரசியல் முறையி னால், தமிழ், சிங்கள மக்களுக்கிடையே பாரதூரமான பிளவு ஏற்பட்டது.
புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட வேளையில், இலங்கையில் மாத்திரம் அல்ல உலகளாவிய ரீதியில் முஸ்லிம் அடிப்படை வாதம் பாரதூரமாக முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக இந்நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகளால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் விஷேடமாக தேரர்கள் என்ற ரீதியில், எமது கொள்கையை முன்வைத்தோம். ஆனால், எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக அவர்களை இலக்கு வைத்து நாம் கொள்கைகளை உருவாக்கவில்லை.
இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை யாவரும் அறிவார். இருந்தாலும் மூவினத்தவரும் சுமூகமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.
அல்கொய்தா, தலிபான், தௌஹீத் ஆகிய அமைப்புக்கள் நாடுகளில் ஏகத்துவ கொள்கையை பரப்பு வதற்கு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. இதற்குள் முஸ்லிம் சமூகத்தை நுழைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசியல் வாதிகள் எவரும் வாய்திறப்பதில்லை.
பள்ளிவாசல்கள் மீது நாம் தாக்குதல் நடத்தவில்லை. முஸ்லிம்கள் அணியும் நிகாப், புர்கா விற்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும். இதில் அநியாயம் ஒன்றும் இல்லை.
இவ்வாறான ஆடைகளை அணிந்து கொண்டு பல்வேறுகுற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் நிகாப், புர்காவை அணிந்து வந்தால் அவர் ஆணா? பெண்ணா? ஏன் கொள்ளைக்காரரா என்று கூட எம்மால் அடையாளம் காணமுடியாது.
உதாரணமாக அண்மையில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவத்தைக் கூறலாம். கொலை செய்யப்பட்ட மஸ்மி புர்கா அணிந்து முஸ்லிம் பெண்னொருவர் போல பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்றே கூறப்பட்டுள்ளது.
இதனால் விஷேட அதிரடிப்படையினருக்கு, சம்பந்தப்பட்ட நபரை விரைவில் அடையாளம் கண்டுகொள்வதில் பெரும் சிரமமாக இருந்தது. எம்மால் இந்த ஆடைக்குள் யார் இருக்கின்றது என்பதை அடையாளம் காண முடியாதல்லவா? இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments