வாதுவ பிரதேசத்தில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வாதுவ பொதுச் சந்தை தொகுதியில் உள்ள இறைச்சிக்கடையே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சி கடைக்கு தீ வைத்தவர்கள் இதுவரை இனம் காணப்படாத நிலையில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.
0 Comments