ஆளுங் கட்சியுடன்
இணைந்து கொண்ட தயாசிறி ஜயசேகரவின் இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்
குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நளின் பண்டார
நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தனது பதவியை இன்று இராஜினாமா
செய்வதாக அறிவித்ததை அடுத்தே நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,
தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் வடமேல் மாகாண
சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments