Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முறைப்பாடுகள் குறித்து விசேட உயர் மட்ட குழு நியமனம்

மருந்து கொள்வனவு, ஆஸ் பத்திரிகளுக்கான கட்டட நிர்மாணம் போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகள், முறைப்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற் காக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
மருந்து கொள்வனவு செய்வதற்கு கேள்விமனு வழங்குகையில் இடம் பெறும் மோசடிகள் குறித்தும் ஆஸ்பத் திரிக் கட்டடங்கள் நிர்மாணிக்க கேள்வி மனு பெற்று அதனை
வேண்டுமென்றே தாமதிக்கும் கம்பனிகள் குறித்தும் இதன் போது விசாரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
வேண்டுமென்று நிர்மாணப் பணிகளை தாம திக்கும் ஒப்பந்த கம்பனிகளை தடைசெய்ய (Blacklist) நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கத்தின் எந்த ஒப்பந்தமும் வழங்காதிருக்கச் செய்வதாக வும் அமைச்சர் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சினூடாக மருந்து கொள்வனவு செய்வதற்கு கேள்வி மனு வழங்குகையிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக கேள்வி மனு வழங்குகையிலும் இடம்பெறும் குறைபாடுகள் மற்றும் மோசடிகள் குறித்து அமைச்சிற்கு இடைக்கிடையே முறைப்பாடுகள் கிடைத்து வருகிறன.
எனவே இவ்வாறான முறைப்பாடுகளை விசாரித்து அவ்வாறு ஏதும் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குறித்த குழு சிபார்சுகளை முன்வைக்க உள்ளது.
இந்தக் குழுவின் நடவடி க்கைகளை சுகாதார அமைச்சர் நேரடியாக கவனிக்க உள்ளதோடு இந்தக் குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மஹிபால ஹேரத், சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால, தேசிய ஒளடத அதிகார சபை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த பெனரகம, சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி ரியாஸா அஹமட் ஆகியோர் அடங்குகின்றனர்.

Post a Comment

0 Comments