ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை நகர சபை
உறுப்பினரொருவரின் கெப் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த
இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 22 வயதான இளைஞனொருவனே
உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொறு இளைஞன்
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நகர சபை உறுப்பினர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 Comments