
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது,
தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த
யோகேஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை
ஒன்றை பிறப்பித்துள்ளார்.யோகேஸ்வரன் மணிமாறன் இலங்கையில் வங்கியொன்றில் பண மோசடியில்
ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது
அரையிறுதி ஆட்டம், லண்டன் காடிப் மைதானத்தில் நடைபெற்றபோதே இவர் புலிக்
கொடியுடன் மைதானத்திற்குள் பிரவேசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments