Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பஸ்களில் அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கி பயன்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை


பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றமைக்கு எதிராக கடும் நடவடிக்கைகயை எடுக்கவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தமக்கு நாளாந்தம் கிடைக்கின்ற முறைப்பாடுகள்
தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.
பஸ்களின் உரிமையாளர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தாத பட்சத்தில் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் அவர் கூறியுள்ளார்.
சிறந்த பஸ் சேவையை முன்னெடுப்பதற்காக நிபந்தனையுடன் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதென தனியார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments