Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ராஜினாமா அறிவித்த பாப்பரசர் மக்கள் முன் தோற்றம்

பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது அசீர்வாதப்பர், தன் மீதான அன்புக்கும் பிரார்த்தனைக்கும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாப்பரசர் தனது இராஜினமா அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து முதல் முறையாக நேற்று மக்கள் முன் தோன்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் வத்திக்கான் மண்டபத்தில் பாப்பரசர் உரையாற்றினார். அதில் தனது ராஜினாமா நல்லதை விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டார். பாப்பரசர் தனது
இராஜினாமாவுக்கு முன் மக்கள் முன் தோன்றும் கடைசி நிகழ்வாக இது கருதப்படுகிறது.இதனால் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற் றிருந்தனர். “உங்களது அன்பு மற்றும் பிரார்த்தனைக்காக நன்றிகளை தெரிவிக்கிறேன். எனக்காகவும் திருச்சபைக்காகவும் எதிர்கால பாப்பரசருக்காகவும் பிரார்த்தியுகள்” என்று பாப்பரசர் இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே 85 வயதான பாப்பரசர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இதய சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக வத்திக்கான் தற்போது கூறியுள்ளது.
எனினும் அவரது பதவி விலகலுக்கு இது காரணம் அல்ல என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. எனினும் தனது வயது முதிர்ச்சி காரணமாகவே பதவி விலகுவதாக பாப்பரசர் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments