Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அமெரிக்காவுடனான பேச்சுக்கு ஈரான் தயார்

அணு விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் நியாயமான மற்றும் உண்மையான குறிக்கோளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வந்தாலே தாம் அதற்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி நிபந்தனை விதித்துள்ளார்.ஈரானுடனான அணுப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த அடுத்த தினமே ஈரான்
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. ஆனால் தாம் அமைதியான செயற்பாடுகளுக்கே அணு சோதனை மேற்கொள்வதாக ஈரான் கூறி வருகிறது.

Post a Comment

0 Comments