Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

விண்வெளிக்கு செல்லும் முதல் மனிதனாக மாற ஆசை : ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத்

விண்வெளிக்கு குரங்கு அனுப்பப்பட்டதை மேற்கத்திய நாடுகள் நம்ப மறுக்கின்றன என்றும் ஈரான் விண்கலம் மூலம், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டால் முதல் ஆளாக நான் செல்ல தயாராக இருக்கிறேன் என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.  நம்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பினால் விண்வெளி திட்டத்தில் வெற்றி கண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஈரானின் விண்வெளி ஆய்வாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்.
 
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு உயிருடன் திரும்பியதன் மூலம் தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் கூறி வருகிறது.
 
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ராக்கெட் சோதனை என்ற போர்வையில் ஈரான், ஏவுகணை தயாரிக்கலாம் என்று சந்தேகிக்கின்றன.

Post a Comment

0 Comments