Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் சவூதியில் நீண்ட காலம் சிறை இருக்கும் தமது உறவினர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பல பெண்கள் மற்றும் குறைந்தது 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சவூதியின் ரியாத் மற்றும் புரைதா நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற விசாரணை அல்லது சட்டத்தரணியை வைத்திருக்க அனுமதியின்றி சிறை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை
நீதிமன்றத்தின் முன்நிறுத்துமாறு அவர்களது பெண் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சவூதி செயற்பாட்டாளர் மொஹமத் அல் கஹ்தானி சி.என்.என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
அல் கஹ்தானியும் சவூதி மன்னரின் நம்பிக்கையை மீறியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ரியாத் நகரில் இருக்கும் அரச ஆதரவு பெற்ற மனித உரிமை அமைப்பின் கட்டிடத்திற்கு வெளியால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதில் பங்கேற்ற ஒரு பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் அளவு பங்கேற்றதாகவும் ஆர்ப்பாட்டத்தை கலைக்கமுயன்ற பொலிஸார் இரு பெண்களை கைது செய்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டார். அதேபோன்று புரைதா நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 26 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி சிறையில் இருக்கும் பல அரசியல் கைதிகளும் எந்த விசாரணையும் இன்றி நீண்ட காலமாக சிறை அனுபவித்து வருகின்றனர் என செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையொட்டி கடந்த 2011 பெப்ரவரி தொடக்கம் சவூதியில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments