ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் பொது பல சேன அமைப்புக்கும் ஸ்ரீ
லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேன அமைப்பினர்
மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே
இச் சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில்
ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் அக் கட்சி சார்பில் பாராளுமன்ற
உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹலீம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான
முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
பொதுபல சேன சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர், செயலாளர்
அத்தே ஞான சார தேரர், அதன் அமைப்பாளர் டாக்டர் விதானகே ஆகியோர் கலந்து
கொண்டனர்.
முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர்
கான், மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம், மௌலவி மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது முஸ்லிம்கள் தொடர்பில் பொதுபல சேன அமைப்பு முன்வைத்துவரும்
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட்டதாக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்
அஸ்கர் கான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் ஒரு இனமுறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகளை
மேற்கொள்ள வேண்டாம் என பொதுபல சேனவிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டதாகவும்
முரண்பாடுகள் ஏற்படும்போது இருதரப்பினரும் அவற்றை நேரடியாகப் பேசித்
தீர்க்க வேண்டும் எனும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.
0 Comments