Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஹலாலை புறக்கணிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு : ஓமல்பே


 புதிய ஹலால்-ஹராம்  முறையானது சிங்கள முஸ்லிம் மக்களிடையிலான நல்லுறவுக்கு பாதிப்பாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,நாளொன்றுக்கு நாமனைவரும் 20 ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை ஹலால் தொடர்பில்
செலவிடுகிறோம்.ஹலால் அற்ற உணவுகளை உட்கொண்டால் தவறான வழியில் செல்வதாகக்  கூறுகின்றனர்.திருமணத்தில் ஹலால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் தவறானவர்களா?
இது மதவாத பிரச்சினை அல்ல.உண்மையான இஸ்லாமிய சிந்தனை குர்ஆனில் உள்ளது. புதிய ஹலால் முறைமையானது சிங்கள் முஸ்லிம் நல்லுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஹலால் சான்றிதழுக்காக வியாபார நிறுவனங்களிடம் கட்டணம் அறவிடப்படும் போது  அது நுகர்வோரையே பாதிக்கும்.100 கோடி  நிதி திரட்டப்படும் போது அதில் 70 கோடி நிதி சிங்களவர்களினதாகும்.
சிங்கள் முஸ்லிம் நல்லுறவு வளரவேண்டுமாயின் ஹலால் பெயரில் மேற்கொள்ளப்படும் ஹராமான முறைமைகள் அழிக்கப்படவேண்டும்.
ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்களுக்காக ஏன் நாங்கள் பணத்தை விரயம் செய்யவேண்டும். முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் தான் வேண்டும் என்றால்  எமக்கு ஹலாலை புறக்கணிக்கும் உரிமையும் உண்டு என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments