
உணவு விஷமடைந்ததால் பாதிக்கப்பட்ட கள்எலிய மகளிர் அரபுக்கல்லூரியின் 52 யுவதிகள் வத்துபிட்டிவெல வைத்திய சாலையில் நேற்றையதினம் மதியம் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த அரபுக்கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட இறைச்சி மற்றும் டின் மீன் ஆகியன விஷமாகியுள்ளதாக ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள்
மேலும் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு 'சேலைன்' ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்களின் நிலைமை சாதாரணமானது எனவும் வாந்தி மற்றும் மயக்க நிலைமை காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. சம்பவத்தை அடுத்து குறித்த மாணவிகள் விடுதிக்கு சென்ற பரிசோதகர்கள் அங்குள்ள சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.
0 Comments