Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

ஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலா லில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்த மான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.கம்பளை இல்லவதுறை ரஹ் மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜே. எம். சஹீர் தலைமையில் நடைபெற்ற புதிய கட்டிடக் தொகுதியின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு
அவர் இவ்வாறு கூறினார்.நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்தி களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.
நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத் தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந் துணர்வு ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
எனவே இச்சந்தர்ப்பத்தில் இனங்களுக்கு மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது.
இவ்வாறான முரண்பாடுகளை உரு வாக்குவதற்கு சிறு சக்திகள் முற்படுகின்றன. நாம் முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.
சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை தண்டிக்க சில நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன. பின்லாடன் எப்படி கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன? நடந்தது அவரை கொலை செய்ய யார் வந்தார்கள். என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் இலங்கைக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமா தானத்தை ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் யுத்தத்தின் பின்பு வட கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் கோயில்களை நிர்மாணிக்கவும் பள்ளிவாசல்கள் கட்டவும் உதவியுள்ளது.
இதற்காக 870 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்துகொண்டார்.

Post a Comment

0 Comments