Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பௌத்த பிக்குகள் - உலமாக்கள் கலந்துரையாடல் ஹலால் சான்றிதழ் விவகாரம் குறித்து ஆராய்வு

 Meet 2013.02.01பௌத்த பிக்குகளுக்கும் உலமாக்களுக்குமிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலான கலந்துரையாடலும் அன்னதான நிகழ்வும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினரால் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பெளத்தமுஸ்லில் நல்லுறவை
மேம்படுத்தும் நோக்கிலேயே இந் நிகழ்வு செய்யப்பட்டது.இஸ்லாமிய நிலையத்தில் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான எம்.எச். முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் கம்புறுபிட்டிய தேரர், களனி பல்கலைக்கழக வேந்தர் வெல்லம்வல தேரர் உட்பட பல முஸ்லிம் மத பெரியார்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக வேந்தர் வெல்லம்பொல தேரர், இந்த நாட்டில் முஸ்லிம்கள் 8 வீதம் மட்டுமே வாழ்கின்றனர்.
ஆனால் 80 வீதமான பெளத்தர்களும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பண்டங்களையே வாங்க வேண்டியுள்ளது.
ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக ஜம் இயத்துல் உலமா பணம் அறவிடுகின்றது. இதனை முஸ்லிம் தலைவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
முன்னாள் சபாநாயகர் எம். எச். முஹம்மதை நாங்கள் மதிக்கின்றோம். அவரின் 60 வருட அரசியல் வாழ்வில் பெளத்த மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்தவர்.
அவரிடம் இனவாதமோ மதவாதமோ இல்லை. அவருக்கு கடந்த 60 வருடகாலமாக பொரளைத் தொகுதியில் உள்ள பௌத்தர்களே வாக்களித்து வந்தனர். அவர் பௌத்தர்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்துள்ளார் என்றும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments