
சவுதி மன்னர் அப்துல்லா மற்றும் உள்விவகார அமைச்சர் ஆகியோரிடம் மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கை மன்னித்து விடுதலை
செய்ய வேண்டும் என இலங்கை அரசு சவுதி மன்னர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் ரிசானா நபீக்கால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோர் ரிசானாவிற்கு பொது மன்னிப்பு அளித்து இரத்தப்பணம் பெற்றால் மாத்திரமே ரிசானா நபீக்கை காப்பாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதி மன்னரும் உள்விவகார அமைச்சரும் ரிசானா நபீக் மீதான மரண தண்டனையை உடன் நீக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் சிரேஸ்ட மகளிர் பிரிவு ஆய்வாளர் நிசா வரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
மரண தண்டனையில் இருந்து ரிசானாவை விடுவிக்க சவுதி அதிகாரிகள் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரையும் ரிசானாவின் உறவினர்களையும் சந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ரிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறைகள் சவுதி மன்னரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குழந்தையின் கொலை இடம்பெற்ற போது ரிசானாவும் சிறுமி எனவும் வழக்கு விசாரணையில் மொழிப்பிரச்சினை காணப்பட்டதால் உண்மையை கூற முடியாது தவித்ததாகவும் நிசா வரியா தெரிவித்துள்ளார்.
குழந்தை குற்றவாளி எப்போதும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனவும் இது குறித்து சவுதி அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது
0 Comments