
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிப்பதாக கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுத்தியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிற்கும் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.தான் இன்றிரவு ஜனாதிபதியை சந்திப்பதாகவும் இதன்போது
குறித்த திரைப்படம் தொடர்பான முறைபாடடன்கிய மகஜரை அவரிடம் கையளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த திரைப்படம் தொடர்பில் 50 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தணிக்கை சபையின் தலைவர் காமினி சமரசேகர ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments