Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

வெல்லம்பிட்டியில் பாவனைக்கு உதவாத தேயிலை தூளுடன் மூவர் கைது

வெல்லம்பிட்டியில் பாவனைக்கு உதவாத தேயிலை தூளுடன் மூவர் கைது
வெல்லம்பிட்டிய - சித்தன்பச்ச பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள் ஒரு தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இதன்போது மூன்று சந்தேகநபர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர். குறித்த களஞ்சியசாலையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத 30,000 கிலோ தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments