
இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால்,
கேஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத்
தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவின்
விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள எரிவாயுக் கம்பனிகளின் வேண்டுகோள்,
நுகர்வோர் விவகார அதிகார சபையால் பரிசீலிக்கப்பட்டுவருவதாக, நுகர்வோர்
விவகார அதிகார சபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் பல அனல் மின் நிலையங்களில்
மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 2 வகை உலை எண்ணெய்யின் விலையை
உயர்த்திவிட்டது.
இலங்கை
மின்சாரசபை மற்றும் வேறு அனல் வெப்ப மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மானிய
விலையில் எரிபொருளை வழங்குவதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
மாதமொன்றுக்கு 4,194 மில்லியன் ரூபா நட்டமடைவதாக பெற்றோலிய கைத்தொழில்
அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.பி.எம்.ஜி. றொஷான் கூறினார்.
129 ரூபாவுக்கு விற்கவேண்டிய எண்ணெயை 115 ரூபாவுக்கு விற்பதால் ஒரு லீற்றரில் 14 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது
0 Comments