Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அநுராதபுரத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டுள்ளது

அநுராதபுரத்தில் மற்றுமொரு முஸ்லிம் பள்ளிவாசல்..! அநுராதபுரம் - மல்வத்துஓயா பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசால் ஒன்று இனந்தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் அங்கு வெள்ள
நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிப்பை ஏதிர்கொண்டுள்ள இந்த பள்ளிவாசலின் பின்பகுதியை சிலர் அடித்து அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் மற்றுமொரு முஸ்லிம் பள்ளிவாசல்..! பள்ளிவாசல் பகுதியில் ஒருவகை சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் அவ்விடத்திற்கு விரைந்த போது விஷமிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளையில் ஆரம்பித்த பள்ளிவாசல் உடைப்பு - அகற்றம் ராஜகிரிய அநுராதபுரம் என பட்டியல் நீண்டு செல்கிறது. அநுராதபுரத்தில் இதற்கு முன்னரும் ஒரு பள்ளிவாசல் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments