Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் ஊடகங்கள் செயல்படக் கூடாது: ஜனாதிபதி

எந்த மதமாக இருந்தாலும் அதனை நிந்திக்கும் விதத்தில் செய்திகளையோ, கட்டுரைகளையோ, கேலிச்சித்திரங்களையோ பிரசுரிக்க வேண்டாம் என்ற அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நாட்டில் மதப் பூசல்கள் தலைதூக்கியிருப்பது பற்றி வெளிநாட்டு ஊடகங்களில் அதிகளவுக்கு
செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பாக அங்கு கேட்கப்பட்ட போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குழுவொன்றை அழைத்துப் பேசினேன். இந்த விடயம் மிகவும் உணர்வு பூர்வமான பிரச்சினை. மதச் சுதந்திரம் சகலருக்கும் உள்ளது. எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சகலரினதும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். நான் அழைத்துப் பேசிய குழுவினர் தாங்கள் பிரச்சினையில் ஈடுபட்டதாகச் கூறவில்லை .
முஸ்லிம்களையும் அழைத்து பேசுகிறேன். எந்த மதமாக இருந்தாலும் அதனை நிந்திக்கும் விதத்தில் செய்திகளையோ, கட்டுரைகளையோ, கேலிச்சித்திரங்களையோ பிரசுரிக்க வேண்டாம். இன, மதப் முரண்பாட்டுக்கு இடமளித்தால் மோசமான நிலைமைக்கு நாடு சென்றுவிடும். நாட்டின் முன்னேற்றத்தையே பார்க்க வேண்டும். எமக்கென ஒரு கலாசாரம் இருக்கிறது. ஐரோப்பியர் வருகையின் பின்னரும் கூட அந்தக் கலாசாரம் அழிந்து விடாமல் மக்கள் மனங்களில் இருந்துவருகிறது என்று ஜனாதிபதி கூறியுள்ளார் .

Post a Comment

0 Comments