
எகிப்து நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் ஹோஸ்னி முபாரக். இவரது ஆட்சியில் வறுமை,வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை அதிகரித்ததால் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து முபாரக் பதவி விலகியதுடன்,மக்கள் பலர் கொலை
செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முபாரக் மேல்முறையீடு செய்தார்.
இந்தநிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் உட்பட ஏழு பேர் விசாரிக்கப்பட உள்ளனர்.-AD-
0 Comments