
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த
பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் பௌசி, 42 முஸ்லிம் குடும்பங்களை
அங்கிருந்து வெளியேறுவதுதான் சுமூகமான முடிவாக இருக்கும் என்பதால்
முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்ஜித்திடம் அதற்கான இணக்கத்தை தெரிவித்தோம். அங்கு
வாழும் எல்லோருக்கும் நிரந்தர காணி உறுதிகள் இல்லை தொடர்ந்தும்
அச்சுறுத்தலான சூழ்நிலை இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டே இணக்கம்
தெரிவிக்கப்பட்டது .
வெளியேற்றப்படும் முஸ்லிம்களுக்கு
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் காணி மற்றும் வீடு ஆகியவறை
வழங்கவேண்டும் என்ற எமது கோரிக்க்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் இணக்கம்
வெளியிட்டுள்ளார். மேலும் தான் ஜனாதிபதியை சந்திக்கும் போது இது தொடர்பான
மகஜரை ஒன்றை அவரிடம் கையளிப்பதாகவும் அவர் தெரிவித்து எம்மிடம் இருந்து இது
குறித்து மகஜர் ஒன்றை கோரியுள்ளார். என்று தெரிவித்தார் .
மல்வத்து ஓயா ஒழுங்கை பள்ளிவாசலையும் புனித
பூமி பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களையும் அங்கிருந்து
அப்புறப்படுத்துமாறுகோரி கடந்த சனிக்கிழமை பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
நடத்தினர். இதனையடுத்து அனுராதபுரம் மத்திய நுவரகம் பலாத்த கிழக்கு பிரதேச
செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறித்த பள்ளியை அகற்றுவதற்கு
ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று மாத கால அவகாசம் வழங்கியிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாயலை அங்கிருந்து அகற்றுமாறும்
அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுள்ளது .பெளத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட
அநுராதபுரம் நகரில் குறித்த பள்ளிவாசல் ஏற்கனவே இரண்டு முறைகள்
எரியூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .இறுதியாக கடந்த ஹஜ்ஜுப் பெருநாள்
தினமான அதிகாலை எரியூட்டப்பட்டது .-LM-
0 Comments