
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவிலேயே இன்று காலை இப்பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகவும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை உடனடியாக வெளியிட முடியவில்லை எனவும் ஊடகத்தகவல்கள்
தெரிவித்தன.
ஆச்சே மாகாணத்தில் 37 கிலோமீற்றர் ஆழத்தில் 5.9 ரிச்டர் அளவிலான
பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 26 நிமிடங்களின் பின்னர்
4.7 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஒன்றும் பதிவானதாக அமெரிக்க
புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்தது.
இப்பூமியதிர்ச்சி காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் ஊடகங்களிடம்
தெரிவித்துள்ளமையும்.
0 Comments