
ஹலாலுக்கு எதிரதாக ஒரு சிறு குழு மேற்கொண்டுவரும் பிரசாரங்களை
முஸ்லிம்களாகிய நாமே முறியடிக்கவேண்டும். ஏனெனில் அது தொடர்பில் நாமே
உண்மையான தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
எமது மார்க்கத்தில் சுத்தமான உணவினையே உண்ணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி சாப்பிடுவதானால் அழுக்கானவற்றை சாப்பிடமுடியாது. உயிருடன் உள்ள
பிராணியை அறுத்து சாப்பிடவேண்டும். அதுவே முறையானதும் கூட. நாங்கள் அவ்வாறே
செயற்படுகிறோம்.
சுத்தமான வாழ்க்கை ஒன்றினை வாழவே நபிகளார் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
அதன் படியே நாம் நடக்க வேண்டும். இதுவே ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
இன்று ஹலாலுக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் மேற்கொண்டுள்ள பிரசாரங்களை
நாம் சரியான விளக்கங்களைக் கொண்டு முறியடிக்கவேண்டும். ஜனாதிபதி எமக்கு
எதிரானவர் அல்லர். அவர் இன பேதமின்றி செயற்படுகிறார். அமைச்சரவையிலி
முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என எமது அங்கத்துவம் இருக்கின்றது.
நாம் அனைவரும் சிங்கள், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால்
சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 Comments