இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து, விஸ்வரூபம்
படத்தைத் தயாரித்து நடித்துள்ள கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று
கோரிக்கை விடுத்துள்ளனர் ஆந்திரப் பிரதேச இஸ்லாமிய தலைவர்கள்.விஸ்வரூபம் திரைப்படத்தில், உளவு, திகில் காட்சிகள் நிறைந்து பார்ப்பதற்கு
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியாவின் மறகுதிகளில் இருந்து
செய்திகள் வரும் நிலையில், ஹைதரபாத்தைச் சேர்ந்த மஜ்ஜிஸ் பசாவ்
தெஹ்ரீக்கின் தலைமை அம்ஜெத் உல்லாஹ் கான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தப் படத்தைத் தயாரித்துள்ள கமல் ஹாசன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்
என்று கோரியுள்ளார். விஸ்வரூபம் படத்தின் கர்நாடக மாநில விநியோகஸ்தர்
ஹெச்.டி.கங்கராஜு, நேற்று பொலிஸ் உயரதிகாரிகள் இந்தப்படத்தைப் பார்க்க
ஏற்பாடு செய்யப்பட்டது.
0 Comments