
இதனால் குறித்த பகுதிகள் நேற்று (07) மாலை 4 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அனர்த்த எச்சரிக்கை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியாவில் - வலப்பனை, ஹங்குராகெத்த, கொத்மலை, அம்பகமுவகொறள, நோர்டன் பிரிஜ், லக்ஷபான, காசர்ரீ ஆகிய பகுதிகளில் இவ்வாறு அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அனர்த்தம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஏனைய பகுதிகளில் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் வலுவிழந்துள்ளபோதும், இலங்கையை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் கூறினார்.
மழையுடன் காற்றும் இக்காலப் பகுதியில் அதிகமாக இருப்பதுடன், எவ்வித அறிகுறியும் இல்லாது திடீரென மழை பெய்யுமெனவும் அவர் குறிப்பிட்டார்.-AD-
0 Comments