
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்
பின்னர் நாட்டில் பாரியளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு மட்டும் ஏன் தனியான
நிபந்தனைகள் விதிக்கப்படுகின்ற, உலகின் ஏனைய நாடுகளை ஒரு விதமாகவும்
இலங்கையை மற்றொரு விதமாகவும் நடாத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல,அத்துடன் யுத்தத்தின் பின்னர் நாட்டில்
பாரியளவு மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்,
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், நிலக்கண்ணி வெடி அகற்றல்
போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்
தெரிவுக்குழுவில் இணைவது மிகவும் அவசியமானது எனினும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் பல்வேறு
வழிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்த
போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜதந்திரிகளுடன் இடபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments