
அமெரிக்க
ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும் சீனாவுக்கு எதிராகவும் சீன
அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் "சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த
நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை
குவித்துள்ளனர்" என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க
ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து
கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத்
தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்கு அவர் அளித்தப் பேட்டியில்,
"உலகிலேயே
ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான்; சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை
உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே
விமர்சனம் செய்து கொள்வர்; வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ
விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது." என்று அவர் கூறினார்.
0 Comments