Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

குனூத் அந்நாஸிலாவை ஓதி வாருங்கள;ACJU


          
அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் நிகழ்ந்து வருகின்ற இனத்துவேச வெளிப்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அவதானித்து வருகின்றது. பல இடங்களில் முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், முஸ்லிம்களுக்கெதிராக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் என்பன மிகுந்த வேதனையைத்தருகின்றது.தொடராக நடைபெற்று வரும் இத்தகைய செயல்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தை, விஷேடமாக முஸ்லிம் வாலிபர்களைத் தூண்டி இனக்கலவரமொன்றில் ஈடுபட சில சக்திகள் இத்தருணத்தில் முயன்று கொண்டிருக்கின்றனர் என்பதை சகலரும் அவதானித்திருப்பீர்கள். மிக அன்மையில் வெளியாகத் தொடங்கியுள்ள இணையத்தள செய்திகளும், பத்திரிகையாளர் மாநாடுகளும், எதிர்ப்பு ஆர்பாட்டங்களும் அத்தீய சக்திகளின் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்விடம் முறையிடுவதும் அதிகமதிகம் இஸ்தஃபார் செய்வதும் நிதானம் இழந்து விடாமல் நடந்து கொள்வதுமே எமது கடமையாகும்.
من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لايحتسب
யார் அதிகமாக இஸ்திஃபாரில் ஈடுபடுவாரோ அவரது எல்லாக் கவலைகளையும் அல்லாஹ்  போக்கி  சகல கஷ்டங்களையும் நீக்குவான். மேலும் அவன் எதிர்பாரா வழியில் ஆகாரத்தையும் அழிப்பான் (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் அபூ தாவூத் )
ஆதலால் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் அகலவும் பாதுகாப்பு வேண்டியும் குனூத் அந்-நாஸிலா قنوت النازلة  எனப்படும் (பிரச்சினைகள் நேரும் போது ஓதப்படும்) குனூத்தை சகல தொழுகைகளிலும் ஓதி வருமாரு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் அமைதியாகவும் புரிந்துணர்வோடும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் துவேச உணர்வு கொண்ட ஒரு சிறு குழுவினரின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் துணைபுரிவானாக.       
வஸ்ஸலாம்மு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
இவ்வண்ணம்
 
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

0 Comments