Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாட்டில் 90% மக்கள் ஏதோவொரு காரணத்திற்கு மருந்து உட்கொள்கின்றனர்..

  
நாட்டில் 90% மக்கள் ஏதோவொரு காரணத்திற்கு மருந்து உட்கொள்கின்றனர்இலங்கை பிரஜைகளில் 90 சதவீதமானோர் ஏதாவது ஒரு காரணத்திற்காக மருந்துகளை உட்கொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் மாதமொன்றுக்கு 45 தொடக்கம் 50 மில்லியன் பெரசிடமோல் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
அத்துடன், அரச வைத்தியசாலைகளுக்கு வருடமொன்றில் 570 மில்லியன்
பெரசிடமோல் தேவைப்படுகிறது.
மேலும் அநேகமானோர் தனியார் வைத்திய நிலையங்களில் மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர்.
இதன்படி நாளாந்தம் 90 சதவீதமான மக்கள் மருந்துகளை உட்கொள்கின்றனர்.
பலர் வைத்திய ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்வதால் புதுப்புது நோய்களுக்கு ஆளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments