Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பில் 81 பேர் பலி



பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால்
நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர்.
முதல் தாக்குதல் நடைபெற்று சில நிமிடங்கள் கழித்து, அந்த கிளப்புக்கு வெளியே வாகனங்கள் நிற்கும் இடத்தில் ஒரு குண்டு வெடித்ததில், அந்த ஸ்னூக்கர் கிளப் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஒரு வாகனத்தின் கீழ் இரண்டாவது குண்டு வைக்கப்பட்டிருந்தது, அந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் துணை இராணுவத்தினரை குறி வைத்தே எனவும் ஹமீது ஷக்கீல் கூறுகிறார்.
இந்தத் தாக்குதல்களில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள் என்று நம்பப்படுகிறது.


வியாழக்கிழமை(10.1.13) காலை குவெட்டாவிலுள்ள ஒரு அங்காடிப் பகுதியில் மற்றொரு குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
ஒருங்கிணைந்த பலூச் இராணும் எனும் ஆயுதக் குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் இனமோதல் மற்றும் பிரிவினைவாத போராட்டத்தினால் பலூச்சிஸ்தான் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.-bbc-

Post a Comment

0 Comments