குருநாகலில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த பஸ்ஸில் குறித்த நபர் மிதிபலகையில் பயணித்துள்ளார்.
பஸ்ஸின் சாரதி பஸ்ஸை வேகமாக செலுத்திச் சென்று தடுப்பை திடீரென பிரயோகித்ததால் மிதிபலகையில் பயணித்த நபர் பஸ்ஸில் இருந்து வெளியில் வீசிப்பட்டார்.
பின்னர் அவர் கொக்கரல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (04) இரவு 10.15 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 Comments