ஈரான்,
அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
சந்தேகிக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது பொருளாதார தடை
விதிக்கப்பட்டுள்ளது. "அணுசக்தியை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு தான்
பயன்படுத்துகிறோம்' என ஈரான் கூறி வருகிறது. எனினும்,
இதை நம்பாத
அமெரிக்கா, பல வகைகளிலும், ஈரானை உளவு பார்த்து வருகிறது.
ஈரானின்
அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை,
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணிக்கின்றன. ஏற்கனவே, இது
போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டது. அமெரிக்கா
வற்புறுத்தியும் தர மறுத்து விட்டது. தங்கள் நாட்டு எல்லையில் பறந்த
மற்றொரு ஆளில்லாத விமானத்தை, சமீபத்தில் தகர்க்க முயன்றது.
இதற்கிடையே,
தற்போது, வளைகுடா பகுதியில், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த
சிறிய ரக ஆளில்லா விமானத்தை, ஈரான் கடற்படை பிடித்துள்ளது. எப்போது
பிடித்தது, எவ்வாறு பிடித்தது என்பதை ஈரான் அரசு, தெரிவிக்கவில்லை.
"வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக
உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை' என, அமெரிக்கா தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments