அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு அம்பாறை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தின் வடினாகம, கல்கந்த, பல்லன்ஓயா, தேவாலஹிந்த மற்றும் கிவுள்ளேகம ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இவ் நில அதிர்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட குழு ஒன்று இன்று (04) அம்பாறை மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக அத தெரணவிற்கு தெரிய வந்துள்ளது.
0 Comments