
மன்னார், வவுனியாஈ முல்லைத்தீவ மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த உணவுத் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அந்த மாவட்டங்களின் வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.
மன்னார், நானாட்டான், முசலி, மடு மற்றும் மாந்தை பிரதேச செயலக பிரிவுகள் என்பன மிகவும் மோசமாக பாதிப்படைந்தன.
இதனால் அங்கு நான்காயிரத்து இருநூற்று இருபத்து ஐந்து குடும்பங்களை சேர்ந் 17 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அங்கு ஆயிரத்து 307 குடும்பங்கள் இன்னும் 17 முகாமகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹ{னைஸ்பாருக், முசலி பிரதேச சபைத் தலைவர் ஹெயியான், பிரதி தலைவர் பைருஷ், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரின் பிரத்தியோக ரிப்கான் பதியுதீன் மற்றும் முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
இந்த பகதியில் 3 ஆயிரத்து 450 ஏக்கர் விவசாய காணிகள் பாதிப்படைந்துள்ளதுடன், 46 குளங்கள் சேதமடைந்துள்ளன.
0 Comments